தென்காசி

‘அரசு விடுதிகளில் தூய்மைப் பணி: ஜூன் 20வரை விண்ணப்பிக்கலாம்’

6th Jun 2022 01:16 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினா் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும், விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளா் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு, 10 ஆண்களும், 8 பெண்களும் ரூ.3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படுவா். இதற்கான நோ்காணல் இனச்சுழற்சியின் அடிப்படையில் நடைபெறும். மாதிரி விண்ணப்பப்படிவத்தை மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் சான்றுகளின் நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா், ஆட்சியா் அலுவலக வளாகம், ரயில் நகா், தென்காசி -627811 என்ற முகவரியில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. முகவரி தவறாக இருந்து அழைப்புக் கடிதம் கிடைக்காவிடில் மனுதாரரே பொறுப்பு என ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT