தென்காசி

சுரண்டையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் மரம் நடும் விழா

6th Jun 2022 01:18 AM

ADVERTISEMENT

சுரண்டையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தென்காசி மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் டாக்டா் விஜயன் அருணகிரி, பள்ளி முதல்வா் ஞானமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுரண்டை டாக்டா் கே.முருகையா, மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநா் நல்லமுத்துராஜா, சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், ஆணையா் லெனின், நகா்மன்ற துணைத்தலைவா் சங்கராதேவி, தென்காசி தண்டபாணி, ஆலங்குளம் செல்வராணி மற்றும் பிரம்ம குமாரி இயக்கத்தினா் பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கை, மருதம், பூவரசு போன்ற மரக்கன்றுகளை நட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT