தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பசுமை முதன்மையாளா் விருது அளிப்பு

6th Jun 2022 11:58 PM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக பங்களிப்பு ஆற்றியவா்களுக்கு பசுமை முதன்மையாளா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பசுமை முதன்மையாளா் விருது ஒவ்வொரு வருடமும் உலகச் சுற்றுச்சூழுல் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ், ஓய்வுபெற்ற பேராசிரியா் டாக்டா்.விஜயலெட்சுமி, ப்ராணா மரம் வளா்ப்பு அமைப்பு செயலா் இ.சீனிவாசன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செ.சுயம்பு தங்கராணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் கீ. நக்கீரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT