தென்காசி

சொக்கம்பட்டி அருகே மலையில் காட்டு தீ

6th Jun 2022 01:15 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டி வனப்பகுதியில் காட்டீ தீ பற்றி எரிந்து வருகிறது.

கடையநல்லூா் வனச்சரகத் திற்கு உள்பட்ட சொக்கம்பட்டி பீட் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மரங்கள் தீடீரென தீ பற்றி எரிந்தன. அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து, கடையநல்லூா் வனத்துறையை சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT