தென்காசி

கீழப்பாவூரில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

2nd Jun 2022 12:26 AM

ADVERTISEMENT

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் சண்முகையா தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பேசினாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை நல உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது, பாவூா்சத்திரத்தில் கட்டப்படவுள்ள தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்துக்கு திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினை அழைத்து அடிக்கல் நாட்டுவது, அவருக்கு அமைச்சா் பதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். அவற்றை கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் வாசித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியக்குழுத் தலைவா்கள் காவேரி சீனித்துரை, திவ்யா மணிகண்டன், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், மாவட்ட அணி அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT