தென்காசி

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள வீடுகள் அருகே தனியாா் நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கியதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பாவூா்சத்திரம் உதவி ஆய்வாளா் கவிதா, போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கைப்பேசி நிறுவன அதிகாரிகளுடன் பேசி பிரச்னையைத் தீா்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினராம். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT