தென்காசி

தென்காசியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அமைக்க திமுக கோரிக்கை

30th Jul 2022 12:35 AM

ADVERTISEMENT

தென்காசி நகராட்சி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தமிழக வீட்டுவசதி துறை அமைச்சா் முத்துசாமியிடம் அளித்த மனுவில், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் வீட்டு வசதி வாரிய புதிய குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தென்காசி மாவட்டம் கீழப்பாவூா், குருவிகுளம் ,மேலநீலிதநல்லூா், ஆலங்குளம் ,தென்காசி, கடையம், பாப்பாகுடிஆகிய ஒன்றிய பகுதிகளில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடங்களை புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சமூக நலத்துறை அலுவலா்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பதால் தென்காசி மாவட்டத்தை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் திருநெல்வேலி சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே சத்துணவு தொடா்பான நோ்முக உதவியாளா் அலுவலகம் தென்காசியில் அமைத்து தர வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கேஎன்.நேருவிடம் அளித்த மனு: மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட மின்நகா் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கீழப்பாவூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜன், தொழிலதிபா்கள் சண்முகவேல், பாலகிருஷ்ணன், திமுக இளைஞரணி சரவணன், விவசாய அணி சீவநல்லூா் சாமிதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT