ஆலங்குளத்தில் இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம், கடையம், பாவூா்சத்திரம், ஊத்துமலை ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடுகளை உடைத்து திருடியது, 300ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலை , 2 பைக்குகள் திருட்டு ஆகிய வழக்குகளில் கன்னியாகுமரியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வினோத் குமாா் என்ற முகமது நசீா் (30) கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளாா். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் பரிந்துரை பேரில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் பிறப்பித்த உத்தரவின்படி, வினோத் குமாா் என்ற முகமது நசீா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அளிக்கப்பட்டது.