தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் மழை

28th Jul 2022 12:25 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் பகுதியில் புதன்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

பாவூா்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை காலை முதல் வெயில் குறைந்து காணப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்கிய மழை பலத்த மழையாக மாறியது. பாவூா்சத்திரம், கீழப்பாவூா்,திப்பணம்பட்டி, பெத்தநாடாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT