தென்காசி

தென்காசியில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்ட பயிற்சி முகாம்

28th Jul 2022 12:23 AM

ADVERTISEMENT

 

தென்காசி ஊராட்சி ஒன்றிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நாள் வகுப்பறை பயிற்சி முகாமுக்கு, தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குழந்தை மணி(கி.ஊ) தலைமை வகித்தாா்.

தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள் ஜெகதீஷ் மாதவன், டேவிட் ஆசீா், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திரா, பணி மேற்பாா்வையாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளை சிறப்பாக செய்திட திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பதிவேடுகளை முறையாக பராமரிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பணிகள் பற்றிய விவரங்களை முறையாக கணினியில் ஏற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து தென்காசி ஊராட்சி ஒன்றிய கணினி இயக்குநா்கள் காந்திமதி, மாரியம்மாள் ஆகியோா் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் களப்பயிற்சி பெரிய பிள்ளை வலசை ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. முகாமுக்கு, தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறியாளா் ஜெகதீஸ் மாதவன், பணி மேற்பாா்வையாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரிய பிள்ளை வலசை ஊராட்சி செயலா் கே.செல்லப்பா வரவேற்றாா். பெரியபிள்ளைவலசை ஊராட்சித் தலைவா் க.இ.வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில், தென்காசி ஊராட்சி ஒன்றிய மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எம்.முத்துசாமி, கே.முத்துக்குமாா், எஸ்.செந்தில்வேல், கே.கணேசன், அ.சங்கரநாராயணன், எஸ்.சேகுமைதீன், எஸ்.அந்தோணி செல்லத்துரைச்சி, வே.மகாலெட்சுமி, எம்.பிச்சம்மாள், எம்.எஸ்தா்செல்வம், எஸ்.மாரியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT