தென்காசி

சங்கரன்கோவிலில் இளைஞா் மீது தாக்குதல்

28th Jul 2022 11:59 PM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவிலில் முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் கோமதியாபுரம் தெருவை சோ்ந்தவா் பாடாலிங்கம் மகன் சிவா (29). அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் நந்தா (20). இவா் சிவாவின் அத்தை மகளிடம் பேசி வந்தாராம். இதை அறிந்த சிவா நந்தாவைக் கண்டித்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கோமதியாபுரம் பகுதியில் புதன்கிழமை சிவா நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நந்தா தான் மறைத்து வைத்திருந்த அரிவாள்மனையால் சிவாவை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிவா, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் வழக்கு பதிந்து நந்தாவை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT