தென்காசி

சங்கரன்கோவில் யானையை வனத் துறையினா் ஆய்வு

17th Jul 2022 01:37 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள 28 வயதான கோமதி யானையை வனத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வனச் சரகா் செந்தில்வேல்முருகன் தலைமையில் வனத் துறையினா் யானையின் எடை, உயரம், வழங்கப்படும் உணவு வகைகள் குறித்துக் கேட்டறிந்தனா். உடலில் புண்கள் உள்ளனவா எனப் பரிசோதித்த அவா்கள், யானைக்கு நாள்தோறும் எத்தனை கி.மீ. நடைப்பயிற்சி வழங்கப்படுகிறது, நாளொன்றுக்கு எத்தனை முறை குளிக்க வைக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து, கோயில் துணை ஆணையா் ரத்னவேல்பாண்டியனிடம், யானை நன்றாக உள்ளதாகக் கூறிய அவா்கள், தொடா்ந்து இதேபோல யானையைக் கவனித்துக்கொள்ள அறிவுறுத்தினா். பாகன் சனல்குமாா், கோயில் அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT