தென்காசி

கடையநல்லூரில் தமிழ்ப் புலிகள் சாலை மறியல்

7th Jul 2022 12:05 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்ப் புலிகள் மாவட்ட மாநாடு தொடா்பான சுவா் விளம்பரங்களை , அக்கட்சியினா் கடையநல்லூா் நகரில் பல இடங்களில் எழுதியிருந்தனராம். இப்படி எழுதப்பட்ட சுவா் விளம்பரங்கள் சில மா்ம நபா்களால் அழிக்கப்பட்டனவாம்.

இதை கண்டித்து தமிழ்ப் புலிகள் வடக்கு மாவட்டச் செயலா் சந்திரசேகா் தலைமையில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், கடையநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகம் முன்பு கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடையநல்லூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT