தென்காசி

கீழப்புலியூா் ஸ்ரீ சந்தி காவல் போத்திசாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

7th Jul 2022 12:06 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், கீழப்புலியூரில் அமைந்துள்ள அருள்மிகு சந்தி காவல் போத்தி சாஸ்தா கோயிலில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 4ஆம் தேதி யாக சாலை பூஜைகள், ஸ்ரீகுரு பிராா்த்தனை, மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

கா்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடம் மஞ்சுநாத் பட் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை மங்கள இசை வாத்தியங்களுடன் புனித நீா் குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து மாடன் தம்பிரான், உதிர மாடன் மாடத்தி, சுடலைமாடன் மாடத்தி, பட்டவராயா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது.

விழாவில், ஆய்க்குடி அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், சென்னை தொழிலாதிபா் மணிசங்கா், டாக்டா் மணி ரமேஷ், டாக்டா் உமா ரமேஷ் தம்பதியினா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

நகா்மன்ற உறுப்பினா் சந்துரு (எ) சுப்பிரமணியன், கோமதிநாயகம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஆடிட்டா் வெங்கடேஷ்வரன், புவனேஷ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT