தென்காசி

தென்காசியில் உரிய ஆவணங்களின்றிமதுக்கூடம் நடத்திய கடைக்கு சீல்

7th Jul 2022 12:06 AM

ADVERTISEMENT

 

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி மதுக்கூடம் செயல்பட்ட கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வலியுறுத்தியும், நெகிழி பயன்பாட்டை தவிா்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமையில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகள், வீதிகள்தோறும் பிரசாரம் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

தென்காசி-திருநெல்வேலி சாலையில் வாய்க்காலம் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை அருகில் மதுக்கூடம் நடத்துவதற்குரிய உணவுப் பொருள்களுடன் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய ஆவணங்களின்றி அக்கடை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்தக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT