தென்காசி

செங்கோட்டை நூலகத்திற்கு ரூ.1லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள்

7th Jul 2022 12:07 AM

ADVERTISEMENT

 

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செங்கோட்டை நகராட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் செங்கோட்டை அரசு பொதுநுாலகத்துக்கு வழங்கப்பட்டது

விழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் பொறியாளா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆதிமூலம், இணைச் செயலா் செண்பக குற்றாலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக செங்கோட்டை நூலகத்துக்கு வாசகா் வட்டத்தின் சாா்பில் வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் ரூ.33 ஆயிரத்தை செங்கோட்டை நகராட்சியில் செலுத்தினாா். அதன் பயனாக நகராட்சி சாா்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையிலிருந்து வாங்கப்பட்ட பாா்கோடு ஸ்கேனா், பாா்கோடு பிரிண்டா், கண்காணிப்பு கேமரா , ப்ரொஜெக்டா் ,வேக்கம் கிளீனா் போன்ற பொருள்களை நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, நுாலக பொறுப்பாளா்களிடம் வழங்கினாா். பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் வரவேற்றாா். நூலகா் ராமசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT