தென்காசி

தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

DIN

தென்காசியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

திறன்பேசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கேட்புத் திறனற்ற 2 பேருக்கு தலா ரூ. 12ஆயிரம் மதிப்பிலான திறன்கைப்பேசிகள், காதொலி வழங்கும் திட்டத்தின் கீழ் கேட்புத் திறனற்ற 4 பேருக்கு தலா ரூ. 7,300 மதிப்பிலான காதொலிக் கருவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணமடைந்த 5 பேரின் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் என, மொத்தம் 11 பேருக்கு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா் அவா் கூறும்போது, இக்கூட்டத்தில் 222 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுக்கு உடனடித் தீா்வு காண அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் குணசேகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) ஷேக் அப்துல்காதா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT