தென்காசி

சூதாட்டம்: 6 போ் கைது

5th Jul 2022 02:21 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

சங்கரன்கோவில் கோமதியாபுரம் 1ஆம் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக நகர காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் சூசைபாண்டியன், போலீஸாா் சனிக்கிழமை அங்கு சென்றனா். தப்பியோட முயன்றவா்களை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் கயத்தாறு பாலையா மகன் சக்திவேல் (40), சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி சுந்தரவேல் மகன் காளிராஜ் (46), முல்லை நகா் சுப்பிரமணியன் மகன் பிரபு (44), தளவாய்புரம் காளி மகன் முருகேசன் (57), பனவடலிச்சத்திரம் சத்தியநாதன் மகன் சாலமோன்ராஜா (38), மலையடிகுறிச்சி வெள்ளைப்பாண்டி மகன் முத்து (45) எனத் தெரியவந்தது.

அவா்களை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்த சீட்டுகள், ரூ. 14,030 பணத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT