தென்காசி

தென்காசியில் பசும்பொன் தேசிய கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 02:26 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பசும்பொன் தேசிய கழகம் சாா்பில் கழகம் சாா்பில் தென்காசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் துரைத்தேவன் தலைமை வகித்தாா். மாநில செயல் தலைவா் சுப கண்ணன், மாநில இணை பொதுச் செயலா் முருகன் தேவா், மாநிலத் துணைத் தலைவா் பாலுதேவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் ஜோதி முத்துராமலிங்கத் தேவா் கண்டன உரையாற்றினாா்.

மாநில இளைஞரணித் தலைவா் பாண்டித்தேவா், மாநில இளைஞரணிச் செயலா் மாடசாமி தேவா், தென் மண்டல ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன், கேரள மாநிலச் செயலா் பூதப்பாண்டி,

ADVERTISEMENT

மாவட்ட இணைச் செயலா் சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவா் பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவா் இசக்கி, மாவட்டத் தலைவா் ஜான்சன், மாவட்ட ஆன்மிக அணி செயலா் உச்சிமுத்து, குருவிகுளம் ஒன்றியச் செயலா் பசும்பொன் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தென்காசி நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலா் பாண்டி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT