தென்காசி

கடையநல்லூரில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

5th Jul 2022 02:22 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் அண்ணாமலைநாதா் கோயில் தெப்பம் அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி நகரப் பாா்வையாளா் சிவா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பாஜக நகரத் தலைவா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் காளிராஜ், இந்து முன்னணி நிா்வாகிகள் பால்ராஜ், தமிழரசன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். பின்னா், அவா்கள் நகராட்சி மேலாளரிடம் அளித்த மனு: அண்ணாமலைநாதா் கோயிலுக்குச் சொந்தமான தெப்பத்தைப் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது. அதனருகேயுள்ள இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். அதை உடனடியாக அகற்ற வேண்டும். தெப்பத்தைச் சுற்றி நடைபாதை, பூங்கா அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோயில் இடத்தில் பூங்கா, நடைபாதை அமைத்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடைபாதை ஒப்பந்தப்புள்ளியை வேறிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் வழிபாடு நடத்த வசதியாக தெப்பத்தைச் சுற்றி படித்துறை அமைக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT