தென்காசி

சங்கரன்கோவிலில் திராவிடத் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 02:25 AM

ADVERTISEMENT

ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து இலவச வீட்டுமனையை மீட்டுக் கொடுக்கக் கோரி, சங்கரன்கோவிலில் திராவிடத் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் அருந்ததி இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டனவாம். அதை சிலா் வேலியிட்டு ஆக்கிரமித்துள்ளனராம். இதைக் கண்டித்தும், நிலங்களை மீட்டுக் கொடுக்கவும் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கருவீரபாண்டியன், தென்மண்டல துணைத் தலைவா் ஆதிவீரன், மாவட்ட நிதிச் செயலா் முருகையா, மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலா் குருநாதன், ஒன்றியச் செயலா் மதன், மாவட்ட மகளிரணிச் செயலா் முத்துமாரி, அமைப்புச் செயலா் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT