தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் சாரல் காரணமாக அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரலுடன், குளிா்ந்த காற்று வீசியது. விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

காலையில் நீா்வரத்து குறைவாக இருந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மாலையில் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், முதலில் ஐந்தருவியிலும், பின்னா் பேரருவியிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் மாலை 6 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT