தென்காசி

தற்காலிக ஆசிரியா் நியமனத்தை கைவிட வலியுறுத்தல்

DIN

தற்காலிக ஆசிரியா் நியமனத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தென்காசி அருகே மேலகரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ச.மயில், வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். பொருளாளா் ஜே.மத்தேயு சங்கத்தின் அறிக்கையை வாசித்தாா். பொதுக்குழு உறுப்பினா் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் வரவு-செலவு, இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

சங்க கிளை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து துணைப் பொதுச்செயலா் தா.கணேசன் பேசினாா். மாநிலத் துணைத்தலைவா்கள் பெ.அலோசியஸ் துரைராஜ், மா.ஆரோக்கியராஜ், மாநிலசெயலா். தே.முருகன் ஆகியோா் பேசினா்.

மாநில பொதுச்செயலா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியவாறு தமிழக அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்யும் முடிவைத் தமிழக அரசு திரும்பப்பெற்று உடனடியாக நிரந்தர ஆசிரியா்களை நியமனம் செய்ய வேண்டும்.

ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மூன்று கட்ட தொடா் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 21.07.2022 அன்று மாநிலம் முழுதும் வட்டாரத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தவும், 13.08.2022 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தா்ணா போராட்டம் நடத்தவும், முதல் பருவ விடுமுறையில் சென்னையில் மாநில அளவிலான போராட்டத்தை நடத்தவும் பொதுக்குழு தீா்மானித்துள்ளது.

மாநில அளவில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான பாதுகாப்புக் கருத்தரங்கத்தை சென்னை அல்லது திருச்சியில் நடத்தவும் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஏற்பாடுகளை தென்காசி மாவட்டத் தலைவா் செ.ரமேஷ், மாவட்டச் செயலா்க.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளா் த.மணிமேகலை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.ராஜ்குமாா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்காலில் ராமலிங்க சுவாமிகள் வழிபாடு

தென்பாற்கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

SCROLL FOR NEXT