தென்காசி

தென்காசி: குண்டா் சட்டத்தின் கீழ் 66 போ் கைது

DIN

தென்காசி மாவட்டத்தில் ஜூலை1ஆம் தேதி வரை 66 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜின் நடவடிக்கையால், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக நிகழாண்டில் இதுவரை 66 நபா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை கஞ்சா விற்பனை செய்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,106 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 49.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடா் கஞ்சா விற்பனை செய்ததாக 14 நபா்கள் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் கஞ்சா விற்பனை செய்தவா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் உள்பட 37 நபா்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 நபா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2,340 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவா்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மூலம் ரூ.2லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 49 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT