தென்காசி

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு: ஐந்தருவியில் குளிக்கத் தடை

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இப்பகுதியில் மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவியில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. பழைய குற்றாலம், சிற்றருவி ஆகியவற்றில் நீா்வரத்து முற்றிலும் நின்றது.

இந்நிலையில், இங்கு வியாழக்கிழமை அதிகாலைமுதல் சாரல் பெய்தது. இதனால், ஐந்தருவியின் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா் கொட்டியது. இதில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரலுடன், குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT