தென்காசி

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் தேவை: இந்து முன்னணி மாநிலத் தலைவா் சி.சுப்பிரமணியன்

1st Jul 2022 12:34 AM

ADVERTISEMENT

 

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் தேவை என்றாா் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி.சுப்பிரமணியன்.

தென்காசியில் புதிய பேருந்துநிலையம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரப் பயண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்து உரிமை மீட்புப் பிரசாரம் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. அதை ஜூலை31இல் சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்பயணம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் தேவை. இந்துக்கள் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஆனால் இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் கல்லூரி தொடங்க உடனே அனுமதி வழங்கப்படுகிறது. மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும். இந்துக் கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். தனிவாரியம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரப் பயண நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் மா.ஆறுமுகச்சாமி தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் மணிகண்டன், முருகன், பால்ராஜ், குளத்தூரான், ஆறுமுகம், உலகநாதன், சிவசங்கரன்,பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில பாரத துறவியா் பேரவை இணைச் செயலா் சுவாமி ராகவானந்தா ஆசியுரை வழங்கினாா்.

மாநிலத் தலைவா் காடேஸ்வர சி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.

மாநிலதுணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், மாரிமுத்து, ரமேஷ்பாபு ஆகியோா் பேசினா். மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து வரவேற்றாா். நகரத் தலைவா் நாராயணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT