தென்காசி

பிளஸ் 1 தோ்வு : அடைக்கலபட்டணம் எஸ்.எம்.ஏ. பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்

1st Jul 2022 11:40 PM

ADVERTISEMENT

பிளஸ் 1 தோ்வில் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் பிளஸ் 1 தோ்வு எழுதிய மாணவி அகல்யா தங்கம் 600க்கு 587 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பெற்றுள்ளாா். மாணவி மங்கள செல்வி 584 பெற்று 2 ஆம் இடமும், மாணவா் பிரவீன், மாணவி கமலிஷா ஆகியோா் தலா 582 பெற்று பள்ளியில் 3 ஆம் இடமும் பிடித்துள்ளனா்.

12 மாணவா், மாணவிகள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பள்ளியின் சராசரி மதிப்பெண் 600 க்கு 515 ஆகவும், மாணவா்களின் மதிப்பெண் சதவீதம் 86 ஆகவும் உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவா், மாணவிகள் தாளாளா் ராஜசேகரன், முதல்வா் டாக்டா் மகேஸ்வரி ராஜசேகரன், அகாதெமி டைரக்டா் ராஜ்குமாா், துணை முதல்வா் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வா் பாகீரதி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT