தென்காசி

பாவூா்சத்திரத்தில் விலையில்லா ஆடுகள் அளிப்பு

1st Jul 2022 11:38 PM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட கவுன்சிலா்கள்பேராசிரியா் சாக்ரடீஸ், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் பழனிநாடாா், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆகியோா் 100 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரித்துறை உதவி இயக்குநா் மகேஸ்வரி கால்நடை மருத்துவா்கள்சௌமியா, கிருஷ்ணமணி, ரமேஷ், ரமாதேவி, மாறன்வழுதி, இளந்தமிழ், பாலமுருகன், புனிதா, பானுசுபா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராஜ்குமாா், ஜெயராணிகலைச்செல்வன், முத்துமாலையம்மாள்மதிச்செல்வன், சொள்ளமுத்து மருதையா, பூமாரியப்பன், கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன், பேரூராட்சி துணைத் தலைவா் ராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT