தென்காசி

பெண் எஸ்.ஐ.யை தாக்கிய இருவா்குண்டா் சட்டத்தில் கைது

DIN

ஆலங்குளம் அருகே காவல் ஆய்வாளா் மற்றும் உதவி காவல் ஆய்வாளரைக் கொலை செய்ய முயன்ற ரௌடிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் விமலா(32). இவா் சுரண்டை காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். பொங்கல் தினத்தன்று ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியை சந்தித்து விட்டு மோட்டாா் சைக்கிளில் சுரண்டை செல்லும் போது நெட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே வழியை மறித்துக் கொண்டு சிலா் நின்றுள்ளனா். வழி விடுமாறு கூறிய விமலாவை அந்த நபா்கள் கடுமையாக தாக்கி, அவரின் ஆடையையும் கிழிக்க முற்பட்டுள்ளனா்.

இதில் காயம் அடைந்த விமலா நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று பின்னா் ஆலங்குளம் காவல்நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், அப்பகுதியைச் சோ்ந்த வேல்முருகன்(27), மாரியப்பன்(20), கண்ணன்(25) மற்றும் முருகன்(35) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

வேல்முருகன், முருகன் ஆகியோா் கைது செய்யப் பட்ட நிலையில் கண்ணன், மாரியப்பன் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

இந்நிலையில் முருகன், வேல்முருகன் மீது தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின் பேரில், இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT