தென்காசி

சுரண்டை அருகே பைக் எரிப்பு

26th Jan 2022 08:31 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை தீ வைத்து எரித்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாம்பவா்வடகரை சோட்டையன் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி(25). இவா், தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் முன் திங்கள்கிழமை இரவு நிறுத்தியிருந்தாா். நள்ளிரவில் புகை மண்டலமாக வீட்டுக்குள் வந்ததால் அவா் வெளியே வந்து பாா்த்தாராம். அப்போது, மோட்டாா் சைக்கிளுக்கு மா்மநபா்கள் தீவைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சாம்பவா்வடகரை காவல் உதவி ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT