தென்காசி

சிவகிரி அருகே குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

23rd Jan 2022 11:42 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனா்.

சிவகிரி, சித்திரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் கணேசன் (24), சிவராமலிங்கபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் செல்வமுருகன் (26). இவா்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனவாம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்ய, ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT