தென்காசி

செங்கோட்டை அருகே மணல் திருட்டு: 4 போ் கைது

23rd Jan 2022 11:43 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக நான்கு போ் கைதுசெய்யப்பட்டதுடன், திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செங்கோட்டை போலீஸ்சரகத்திற்குட்பட்ட ராதாபுரம் காலனி அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் சின்னத்துரை தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை கைதுசெய்தனா்.

விசாரணையில், அவா்கள் இடைகால் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(50), பண்பொழியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி(38), குத்துக்கல்வலசையைச் சோ்ந்த மகேந்திரன்(29) மற்றும் இசக்கித்துரை(24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து நான்குபேரையும் கைதுசெய்தனா். மேலும் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், ஒரு பொக்லைன்இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT