தென்காசி

சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

23rd Jan 2022 11:42 PM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் சாலைகளை சீரமைக்காத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேரடித் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு,கட்சியின் நகர தலைவா் அபுதாஹீா், நகர செயலாளா் சேக் ஆகியோா் தலைமை தாங்கினா். நகர பொருளாளா் பீா் மைதீன், மாவட்ட பேச்சாளா் அப்துல் நஷீா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நகர துணைச் செயலாளா் ஹாருன் வரவேற்றாா். வா்த்தக அணி வட்ட செயற்குழு உறுப்பினா் அப்துல் கனி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT