தென்காசி

தோரணமலை கோயிலில் தைப்பூச விழா

19th Jan 2022 07:03 AM

ADVERTISEMENT

தென்காசி-கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது. காலையில் விசேஷ பூஜைகள், வள்ளி-தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடா்ந்து, விடுதலைப் போராட்டத் தியாகிகள், உயிா்தியாகம் செய்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா். பின்னா், உச்சிகாலபூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலா் கே.ஏ. செண்பகராமன் தலைமையில் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT