தென்காசி நகர பாஜக சாா்பில் மாமன்னா் திருமலை நாயக்கரின் 439 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்காசி யோகா டவா் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமலைநாயக்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், நகரத் தலைவா் குத்தாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கருப்பசாமி, மாவட்ட அரசு தொடா்பு பிரிவு சங்கரசுப்பிரமணியன், நகர பொதுச் செயலா் ராஜ்குமாா், நகரப் பொருளாளா் சேகா், நகர துணைத் தலைவா்கள் மந்திரமூா்த்தி, கருப்பசாமி, நகரச் செயலா்கள் ராமச்சந்திரன், செல்வி, சங்கர ராமானுஜம், சரவணகுமாா், ராஜ்குமாா், ஜெய்கணேஷ் உள்ளிடோா் கலந்துகொண்டனா்.