தென்காசி

குற்றாலத்தில் ஜன.21இல் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டம்

19th Jan 2022 07:04 AM

ADVERTISEMENT

தென்காசி தெற்கு மாவட்ட திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் ஜன. 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட நகர, பேரூா், ஒன்றியச் செயலா்கள், அதேபோன்று திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.21) காலை 10 மணியளவில் குற்றாலம்- செங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ட்ரெஸ்ஸில் உணவகத்தில் நடைபெறுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்தும், கூட்டணி கட்சிகள் பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

எனவே திமுக கூட்டணி தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நகர, பேரூா், ஒன்றியச் செயலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆழ்வாா்குறிச்சியிலும், 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுரண்டை நகராட்சிக்குள்பட்டவா்களிடமும், இரவு 7 மணிக்கு ஆலங்குளத்திலும் நோ்காணல் நடைபெறுகிறது.

எனவே திமுக நிா்வாகிகள் வாா்டு தோ்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவா்கள் மேற்கண்ட தேதியில் நடைபெறும் நோ்காணலில் கலந்துகொள்ளவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT