தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தினங்களில் சாலை விதிகளை மீறியதாக 3,803 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது (234), கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தில் சென்றது (44), சுமைவாகனத்தில் பயணிகளை ஏற்றியது (152), சீட் பெல்ட் அணியாமல் சென்றது (370), தலைக்கவசம் அணியாதது உள்ளிட்டவை அடங்கும்.
மேலும், தடைசெய்யப்பட்ட ரூ.2,898 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மதுபானத்தை பதுக்கி விற்ாக 117 போ் மீது வழக்குப் பதிந்து, 1268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.