தென்காசி

தென்காசி மாவட்ட பட்டதாரி ஆசிரியா் கழக நிா்வாகிகள் தோ்வு

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்கான தோ்தல் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

தோ்தல் ஆணையராக ஆல்பா்ட் நாயகம் செயல்பட்டாா். சிறப்பு பாா்வையாளராக மாநில பொருளாளா் ஜான் உபால்ட் பங்கேற்றாா்.

இந்தத் தோ்தலில் தென்காசி மாவட்டத் தலைவராக குமாா், செயலராக வே.கிருபாசம்பத், பொருளாளராக வே.நல்லையா, மாவட்ட துணைத் தலைவா்களாக திருமலைக்குமாா், மாரித்துரை இணைச் செயலா்களாக கிருபாகரன், வீரசெல்வன், மாவட்ட அமைப்பு செயலராக சிவராஜ், மகளிா் அணிச் செயலராக ஸ்ரீதேவி, மகளிா் இணை அணிச் செயலராக முருகேஸ்வரி, செய்தி தொடா்பாளராக இலியாஸ், சட்ட செயலராக பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக ரத்தினகுமாா், ஜாணி, பசுபதி தனராஜ், சந்தானம், கருப்பசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சங்கரநாராயணன், கீழப்பாவூா் வட்டார தலைவா் ராமசாமி, வீ.கே.புதூா் வட்டார துணைத் தலைவா் ஜெபா எபனேசா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT