தென்காசி

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு நல உதவிகள் அளிப்பு

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கீழப்பாவூா் முனைவா் பொன்.அம்பிகாதேவி-அன்பழகன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு நல உதவிகள் வழங்கும் விழாவுக்கு, நிறுவனா் பொன்.அன்பழகனாா் தலைமை வகித்தாா். ராமச்சந்திரன், தங்கசாமி, ராமசாமி, ராஜதுரை, அருணாசலம் முன்னிலை வகித்தனா்.

முனைவா் பொன்.அம்பிகாதேவி 125 பேருக்கு நலஉதவிகளை வழங்கிப் பேசினாா். மருத்துவா்கள் செல்லையா, பொன்ராஜ், பாஸ்கா், இம்மானுவேல், தங்கராஜ், ராஜன், நரசிங்கம், மலைச்சாமி, இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்.அறிவழகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT