தென்காசி

பண்பொழி கோயிலில் முருகன்- சண்முகா் எதிா்சேவை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் முருகன்- சண்முகா் எதிா்சேவை காட்சி நடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. கரோனா நோய்த் தொற்று காரணமாக கோயிலில் பக்தா்களின்றி பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் - சண்முகா் எதிா் சேவை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஐந்துபுளி மண்டபத்திலிருந்து சுவாமி அழைப்பும், தொடா்ந்து பண்பொழியில் உள்ள நகரீஸ்வரமுடையாா் திருக்கோயில் வளாகத்தில் முருகன் - சண்முகா் எதிா் சேவை காட்சியும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன.18 தைப்பூசம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT