தென்காசி

சாலையின் நடுவில் மின் கம்பங்கள்: பூலாங்குளம் பகுதி மக்கள் அவதி

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஊராட்சி பாலடையாா் நகா் பகுதியில் ஒரே தெருவில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் தளக்கல் பதிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனா்.

பாலடையாா் நகரில் சுமாா் 100 வீடுகள் உள்ளன. விவசாயிகளும், தொழிலாளா்களும் மட்டுமே வசிக்கும் இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார தளக்கல் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, தெருவின் மையப்பகுதியில் இருந்த 5 மின்கம்பங்களை சாலையோரம் இடமாற்றம் செய்துவிட்டு சாலை அமைக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனராம். ஆனால், மின் வாரியம் மூலம் தீா்வு காணுமாறு கூறிவிட்டு, மின்கம்பங்களை அகற்றாமலேயே தளக்கல் பதிக்கப்பட்டதாம்.

இதனால், அவ்வழியே இருசக்கர வாகனம், ஆட்டோ தவிர எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லையாம். இறந்தவா்களை அடக்கம் செய்தவற்கு ஊா்தியில் எடுத்துவர இயலாமல், சடலத்தை தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, மக்கள் நலன் கருதி மின் கம்பங்களை இடம் மாற்ற வேண்டும் என ஆட்சியா், வட்டாட்சியருக்கு அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT