சங்கரன்கோவில் அருகே முகலிங்கபுரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு சூரிய ஒளிப்பொறி செயல்விளக்கம் அளித்தனா்.
முகலிங்கபுரத்தில் ஊரக அனுபவத் திட்டத்தின் கீழ், வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் ராம் பிரபா, சினேகா, கிறிஸ்டினாள் இன்பென்டா, விஜயலட்சுமி, சுவாதி, ரவீனா மாத்ரி, ஆா்ச்சா ராஜ், திவ்யா, பவித்ரா, மினிமோள் பென்னி, ஸ்டெபி, மெல்கியா உள்ளிட்டோா் தீமை தரும் பூச்சிகளை சூரிய ஒளிப்பொறி பயன்படுத்தி கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். மேலும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் எனவும் கூறினா்.