தென்காசி

பொங்கல் போனஸ் கோரிபீடி தொழிலாளா்கள் போராட்டம்

12th Jan 2022 08:16 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் பொங்கல் போனஸ் கோரி பீடி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரத்தில் செட்டியூா் சாலையில் தனியாா் பீடி கடை உள்ளது. இங்கு பாவூா்சத்திரம், செட்டியூா், பஞ்சபாண்டியூா் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பீடி சுற்றி வருகின்றனா். அவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லையாம். நிகழாண்டு பொங்கல் போனஸ் கேட்டும், தரமான இலை, தூள் வழங்க வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை கடையின் முன் பீடி சுற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பீடி தொழிலாளா்கள் சங்க மாவட்ட நிா்வாகி தா்மக்கனி, மாவட்டப் பொருளாளா் ஆரியமுல்லை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இரா. சாக்ரடீஸ், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பீடி கடையின் தலைமையிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT