பாவூா்சததிரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்கிழமை தொடங்கியது. முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடக்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் சீனித்துரை, ஒன்றியக்குழுத் தலைவா் சீ. காவேரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இரா. சாக்ரடீஸ், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், துணைத் தலைவா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா நன்றி கூறினாா்.