தென்காசி

அச்சன்புதூரில் பயணிகள் நிழற்குடைகள் திறப்பு

12th Jan 2022 08:20 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட அச்சன்புதூா் பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ முஹம்மதுஅபூபக்கா், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2018-21) இருந்து அப்போதைய எம்எல்ஏ முஹம்மது அபூபக்கா் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் முஹம்மதியாா் திடலில் ரூ.5 லட்சத்திலும் பாா்வதியாபுரத்தில் ரூ.3 லட்சத்திலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டன.

அதன் திறப்பு விழா தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான், செங்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலரான முன்னாள் எம்எல்ஏ முஹமது அபூபக்கா் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தாா். இதில், திமுக கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT