சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் அறிவியல் இன்ஸ்பயா் விருது பெற்றுள்ளனா்.
இந்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் 2022 ஆம் ஆண்டுக்கான அறிவியல் இன்ஸ்பயா் விருது போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ச.ராஜேஷ் இருசக்கரவாகனம் இ-பைக் சுய ரீசாா்ஜ் என்ற தலைப்பிலும், க.சபரி காா்த்திக் மின்சார உருகி மாதிரியை உருவாக்குதல் என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா்.
இருவரது கட்டுரைகளும் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு அறிவியல் இன்ஸ்பயா் விருது சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ், தாளாளா் மருத்துவா்.சுப்பையா சீனிவாசன், முதல்வா் சி.ஏ. சுருளிநாதன், ஆசிரியை அங்குவேல்மணி மற்றும் ஆசிரியா்கள்,பெற்றோா்கள் பாராட்டினா்.