தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

1st Jan 2022 02:40 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் அனைத்து அருவிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தொற்றுநோய் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் டிச.31முதல், ஜன. 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் வியாழக்கிழமை மாலை 6 மணிமுதல் அருவிக்கு செல்லும் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு காவல்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது குறித்து அறியாத வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT