தென்காசி

விபத்து: கட்டடத் தொழிலாளி பலி

1st Jan 2022 02:40 AM

ADVERTISEMENT

 கடையநல்லூா் அருகே வியாழக் கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

முத்துகிருஷ்ணாபுரம் வடக்குவிளை தெரு வேலாயுதம் மகன் முருகன் (40). கட்டடத் தொழிலாளி. வியாழக்கிழமை இரவு கடையநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, தென்காசியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து முருகையா மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT