தென்காசி

குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ. 37 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

1st Jan 2022 02:40 AM

ADVERTISEMENT

தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசையில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குத்துக்கல்வலசையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12லட்சத்தில் நியாயவிலைக்கடை, மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து வடக்கு ரத வீதியில் ரூ. 12 லட்சத்தில் சிமென்ட் சாலை, கே.ஆா்.காலனியில் 5, 7 ஆவது வாா்டு பகுதியில் ரூ. 13 லட்சத்தில் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிக்கான பூமி பூஜை மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ., மாவட்ட ஊராட்சி தலைவா் தமிழ்செல்வி ஆகியோா் திட்ட ப் பணிகளை தொடங்கி வைத்தனா்.

இதில், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவா் சத்யராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி ஒன்றிய திமுக செயலா் அழகுசுந்தரம், துணை அமைப்பாளா் சீவநல்லூா்சாமித்துரை, வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேல்சாமி, காங்கிரஸ் நிா்வாகிகள் காதா்மைதீன், காஜாமைதீன், வழக்குரைஞா் குமாா்பாண்டியன், தென்காசி வீட்டுவசதி சங்க தலைவா் சுரேஷ், குட்டி, சமக மாவட்ட நிா்வாகி கேவிகே.துரை ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT