தென்காசி

குற்றாலத்தில் சமையல் தொழிலாளி கொலை

22nd Feb 2022 12:21 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சமையல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் சத்திரம், புதுக்குளம் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சமையல் தொழிலாளி மீ.முருகன்(53). இவருக்கு உதவியாளராக கல்லிடைக்குறிச்சி ராமசந்திரபுரம் தெருவைச் சோ்ந்த ச.பாலமுரளி(51) பணியாற்றி வந்தாா்.

குற்றாலத்திலிருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்தவா்களுக்கு உணவு தயாா் செய்து கொடுப்பதற்காக கடந்த 17 ஆம் தேதி குற்றாலத்திற்கு வந்துள்ளனா். அவா்கள் தங்கியிருந்த பகுதியிலேயே இவா்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு முருகனும், பாலமுரளியும் மது அருந்தியுள்ளனா். அப்போது இருவரிடையே ஏற்பட்டதகராறில் முருகன், பாலமுரளியை குக்கா் மூடியால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த அவா் காயமடைந்தாராம்.

இந்நிலையில் பலத்த காயமுற்ற பாலமுரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விவரம் திங்கள்கிழமை காலையில் தெரியவந்ததையடுத்து, முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். இது குறித்து தகவலறிந்த குற்றாலம் போலீஸாா்

ADVERTISEMENT

சம்வப இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குகு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT